இதேவேளை, கப்பல் விபத்திற்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழக்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இதனிடையே, கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்த 200-க்கும் அதிகமான கடலாமைகளின் உடல்கள் இதுவரை கரையொதுங்கியுள்ளன.
20-க்கும் அதிகமான டொல்பின்களும் 6 திமிங்கிலங்களும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கப்பலின் உள்நாட்டு நிறுவன நிர்வாகத்தினர் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் சட்டத்தின் கீழ், தண்டனை சட்டக்கோவையிலுள்ள சரத்துக்களின் கீழ் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
